வியாழன், 28 ஜூன், 2012

இப்படிக்கு பேதையிவள்...


அன்புள்ள ஆருயிரே
ஆறுதல் யாருமின்றி
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
ஆணழகன் உம் வரவை

யாரு அறியாமல் என்
வாசல் வந்தவரே - உமை
கண்டவுடன் காணவில்லை
கன்னியிவள் காதல் நெஞ்சை

ஊரும் தெரியாது -நீர்
செல்லும் வழியும் புரியாது
ஊமையிவள் தவிக்கின்றேன்
கிளையில்லா ஊஞ்சல்போலே

தனித்திருந்த வேளையிலே
என் கதவு தட்டியவரே
பனித்துளிபோல் என் நெஞ்சை
சிதறடித்து சென்றீரே

எட்டி நின்று பேசிப்போவீர்
என்றினைந்து கதவு திறந்தேன்
எத்தன் நீர் என் நெஞ்சை
கவர்ந்திடுவீர் என்றறியேன்

வெளி வந்த  என்னை  - உம்
வெண் பார்வையால் சலவை செய்தீர்    
காதல் எனும் கவிதை சொல்லி
கன்னியோடு கலவி செய்தீர்

அருகருகே வந்து என்
அழகு கரம் பிடித்திட்டீர்
அன்போடு பேசியென்
அடிநேஞ்சை வருடிவிட்டீர்

கருவிருன்தீன்ற தாயை
கன்னியிவள் மறந்துபோனாள்
மருட்டிவிடும் உம்மழகில்
மஞ்சள் மயில் மயன்கிப்போனாள்

மன்னன் உமை கண்டதும் என்
மாராப்பு விலகியதென்ன
கண்ணன் போல் வந்திந்த
ராதயினை இரசித்ததென்ன

நாணமெனும் வேலிக்குள்
நானிருந்த வேளையிலே
காதலெனும் கத்தி கொண்டு
வேலி தாண்டி வந்தவரே

தாலி கொண்டு வந்தென்னை
கரம் பிடித்து சென்றுடுவீர்
போலியான வாழ்வினிலே
பொய்யாக் காதலொன்றுரைத்துடுவீர்  

எட்டுத்திசையும் பார்க்கின்றேன்
உமை எண்ணி எண்ணி தவிக்கின்றேன்
உம் துணையின்றி பாவையிவளுக்கு
பாரினிலே சொந்தமில்லை

1 கருத்து: