சனி, 14 ஜூலை, 2012

வஞ்சிக் கொடியவள்


வஞ்சிக் கொடியவள் - என் 
நெஞ்சில் கொஞ்சி வரும் 
பிஞ்சுக் கிளியவள் 
நான் கண்துஞ்சும் கணத்திலும் 
என் உயிர் கெஞ்சும் 
வெண் பஞ்சுத் துகிலவள் 
கொடு நஞ்சும் அவள் 
தொட்டால் அமிர்தமாகும் 
ஜனரஞ்சக இராகமவள் 
அஞ்சியோடும் கவரிமானில் 
வாஞ்சைகொண்ட ஜனகனின் மகளவள் 

ஊரந்து வரும் மஞ்சமவள் 
மருதாணி பூசிய மஞ்சளவல் 
இடையழகில் இஞ்சியவள் 
குரலலகில் குயிலை விஞ்சியவள் 
முக அழகில் மயிலை மிஞ்சியவள் 
என் மனமாடும் ஊஞ்சலவள் 
இப் பூமி வந்த ஏஞ்சலவள்...

வெள்ளி, 13 ஜூலை, 2012

பெண்ணே...


காலை பொழுதும் புலர்கிறது_ ஆனால்
எங்களுக்கோர்  விடியலில்லை..
தரையிலே படுத்திருக்கும் ஏழைப்
பென்னினதிட்கு மோட்சமில்லை
கரை வந்து சேர்வதற்கு இந்த
பெண்ணினதிட்கு கப்பலில்லை
தத்தளிக்கும் இவர்கள் மனம்
சமுதயதிட்கு புரிவதில்லை....

சின்ந்தனயில்ல மனிதர்களின்
சீதனம் எனும் கொடுமையினால்
வேதனையில் வீழ்ந்துவிட்டாள்
சொந்தமில்லா சிலையிவள்  
தம் இழி வாழ்வுக்காய்
சீதனம் கேட்கும் காதகர் நடுவில்
வழி தவறி வந்துவிட்டாள்
எழில் மிகு நங்கையிவள்...

விதியின் வலிதான் இது என்று
இவள் நொந்து போவதா- இல்லை
வாழ வழியில்லா ஆடவரின்
வாழ்க்கை பிச்சைஎன சாடுவதா..
ஏழ்மை எனும் ஆழ்கடலில்
கண்ணீரில் மிதக்கிறாள்
கலங்கரை விளக்கேதுவுமில்லா
கரை தெரியா ஓடமிவள்

மன்கைஎன்று பிறந்தது இந்த
மயில் செய்த தவறா????
மதி கெட்ட மானுடமே - உனக்கு
மனசாட்சி இல்லையா???
மலரினை மாலையிலே தொடுபதட்கு
இளம் கொடியிடம் கூலி கேட்கும்
தரம் கெட்ட மனிதர்களும்
தரணியில் பிறந்தனரா???


செவ்வாய், 3 ஜூலை, 2012

சீதனம்


பெண்ணுக்கு பெண்ணால் போடப்படும்
விலங்குதான் சீதனம்
எந்த சீதையாய் இருந்தாலும்
சீதனம் இல்லையென்றால்
அவள் வெறும் பேதைதன்.....
நாதைகளாய் திரியும் ஆடவரும்
பெண்ணை வலை வீசி
தம்மை விலை  பேசி
சீதனம் கேட்கும்
வித்தகர்கள் ஆனார்கள்
ஆனால் வறுமையில்  பிறந்தும்
செம்மையாக வாழும் கன்னகிகளோ
கண்ணீரில் மூழ்கினார்கள்
அன்பு எனும் நகை அணிந்து
கற்பு எனும் கவசம் பூண்டு
அழகோவியமாய் வரும்
பெண்மையிடம் ஆண்மை எதிர்பாக்காது
வேறு ஒரு சீதனத்தை...

வியாழன், 28 ஜூன், 2012

இப்படிக்கு பேதையிவள்...


அன்புள்ள ஆருயிரே
ஆறுதல் யாருமின்றி
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
ஆணழகன் உம் வரவை

யாரு அறியாமல் என்
வாசல் வந்தவரே - உமை
கண்டவுடன் காணவில்லை
கன்னியிவள் காதல் நெஞ்சை

ஊரும் தெரியாது -நீர்
செல்லும் வழியும் புரியாது
ஊமையிவள் தவிக்கின்றேன்
கிளையில்லா ஊஞ்சல்போலே

தனித்திருந்த வேளையிலே
என் கதவு தட்டியவரே
பனித்துளிபோல் என் நெஞ்சை
சிதறடித்து சென்றீரே

எட்டி நின்று பேசிப்போவீர்
என்றினைந்து கதவு திறந்தேன்
எத்தன் நீர் என் நெஞ்சை
கவர்ந்திடுவீர் என்றறியேன்

வெளி வந்த  என்னை  - உம்
வெண் பார்வையால் சலவை செய்தீர்    
காதல் எனும் கவிதை சொல்லி
கன்னியோடு கலவி செய்தீர்

அருகருகே வந்து என்
அழகு கரம் பிடித்திட்டீர்
அன்போடு பேசியென்
அடிநேஞ்சை வருடிவிட்டீர்

கருவிருன்தீன்ற தாயை
கன்னியிவள் மறந்துபோனாள்
மருட்டிவிடும் உம்மழகில்
மஞ்சள் மயில் மயன்கிப்போனாள்

மன்னன் உமை கண்டதும் என்
மாராப்பு விலகியதென்ன
கண்ணன் போல் வந்திந்த
ராதயினை இரசித்ததென்ன

நாணமெனும் வேலிக்குள்
நானிருந்த வேளையிலே
காதலெனும் கத்தி கொண்டு
வேலி தாண்டி வந்தவரே

தாலி கொண்டு வந்தென்னை
கரம் பிடித்து சென்றுடுவீர்
போலியான வாழ்வினிலே
பொய்யாக் காதலொன்றுரைத்துடுவீர்  

எட்டுத்திசையும் பார்க்கின்றேன்
உமை எண்ணி எண்ணி தவிக்கின்றேன்
உம் துணையின்றி பாவையிவளுக்கு
பாரினிலே சொந்தமில்லை

வெள்ளி, 22 ஜூன், 2012

காதல் ரணங்கள்...



அன்பே ஆருயிரே என்று
ஆசையில் சொன்ன வார்த்தைகள்
காற்றருவியில் இன்னும்
கரையவில்லை கண்ணே..
நேற்றைய நாளில்-உன்னை
நெருங்கிய நிமிடங்களில்
அதிகரித்த என் இதயத்துடிப்பு
இன்னும் அடங்கவில்லை பெண்ணே...
உன்னோடு பேசிய கணத்தில்
நீ தந்த முத்த ரணத்தில்
என் நெஞ்சுக் கூடு
கனக்கிறது கண்ணே...

நிலவில்கூட ஊறும்
இது நிரூற்றல்ல
கண்நீரூற்று
முறைகாரன்  நானிருக்க
மூன்னு முடிச்சு
உன் கழுத்தில் விழுந்த
கதை கேட்டால்....
பட்ட மரத்திலும்
உதிரம் கொட்டும்
பாவை நீ
உற்ற இவனை விட்டு
ஊரவனோடு சேர நேர்ந்தால்...

கூட வந்த இவனை
கூண்டில் அடைத்துவிட்டு
சோலைமயில் போனதெங்கே..
காலை வெயில் வேளையிலே
கடற்கரை மணலிலே நம்
கைகள் அணைத்து
கட்டிய வீட்டை
அலை கொண்டு போனதெங்கே..
மாலையில் கோர்த்த
இரு முல்லை பூக்கள்
ஊர்வலம் போகுமுன்
உதிர்ந்து போனதெங்கே..

பனை மரத்து நிழலை
பாவியிவன் நம்பி
பாய் விரித்து படுத்தானோ...
பாழ்பட்ட உலகிலே
காதல் என்பது
கானல் நீரோ..
ஆனாலும் பூவே
நீ தந்த இதயம்
எனக்கு மட்டும்தானடி..
அவனுக்கும் சேர்த்து
உன்னை நேசித்தவன்
நான் மட்டும்தானடி..

உன் கன்னக் குழியிலே
விழுந்த இக் கள்வனுக்கு
கடைசியாய் ஒருமுறை
கண்காட்டி போ பெண்ணே..
என் இதயத்தில்
சோகம் இல்லை
வாழும் உன் வாழ்வு
சிறக்குமென எண்ணி...
கண்களில் கண்ணீர் இல்லை
கை பிடித்தவன் உன்னை
கலங்க விடமாட்டான்
என எண்ணி..

அவனோடு வாழ்ந்தாலும்
வந்து போகும் இவன் நினைவுகளை
பத்திரமாய் பூட்டி வை
நெஞ்சோடு பொத்தி வை
உன் கண்ணோடு ஈரம் வேண்டாம்
என் நெஞ்சோடு நீ வாழ்வாய்...
என் வாழ்வோடு நீ வேண்டாம்
உன் நினைவோடு நான் வாழ்வேன்....
உன் பூ முகம் வாடாது
பொன் விழி கலங்காது
மகராசி நீ வாழ - என்
மனமென்றும் வாழ்த்தி நிற்கும்..

வியாழன், 5 ஏப்ரல், 2012

குழந்தை


உன் குறும்புச் சிரிப்பு                
குதூகலப் பார்வை
மழலை மொழி பேசும்
மரகதக் கண்கள் - அவை
மூடி விரியும் முல்லை மலர்கள்
உன் கொவ்வை இதழ்கள்
அதில் தேன் வடியும் எச்சில் சாறுகள்
ஆகா...!!! எத்தனை அழகு...!!!
ஆயுள் ஒண்டு போதவில்லையே
உன் அழகை இரசிப்பதற்கு.....

உன் பிஞ்சு கால்கள் நோகாமல்
என் நெஞ்சிலே தடம் பதித்து
கொஞ்சி நடை பழகு....
உன் எச்சி தோய்ந்த
அஞ்சு விரல்களால்
என் நெஞ்சிலே அகரம் எழுது
உன் தீராத குறும்பால்
எனை தினம்  தினம்
தொல்லைப்படுத்து  
என் ஆறாத காயங்களும்
அதில் ஆறிப் போய்விடும்

புதன், 28 மார்ச், 2012

நான் கொண்ட காதல்


உன் கண்கள் எனும் காந்தத்தால்
என் இதயம் எனும் இரும்பை
களவாடிச் செல்கிறாய்
காரணம் கேட்டதற்கு
காதலைச் சாடினாய்  
வாரணம் புடைசூழ்ந்து
வாழ்க்கை மீது படை எடுத்தாய்
காதல் எனும் நாணேற்றி
கண்கள் எனும் கணை தொடுத்தாய்
என் இதயம் எனும் இலக்கில் விட்டாய்
நீ தொடுத்த கணை உன்னிடமே
என் இதயமோ உன் வசமே...
உன்னைத்தான் நேசித்தேன்
உன்னைத்தான் சுவாசித்தேன்
உன்னைத்தான் யாசித்தேன்
உன் அருகில் வரத் துடித்தேன்
என் அறியாமையில் வாடித் தவித்தேன்

என் கண்ணாடி இதயத்தில்
உன்னை வைத்து பூட்டிவிட்டு
வெளியிலே வெள்ளை அடித்தேன்
நான் மட்டும் காண்பதற்கு
கண்கள் எனும் யன்னல் வைத்தேன்
உயிரிலே உன்னை சுமந்து
ஊருக்கு தெரியாமல் நடித்தேன்
நினைவு எனும் ஜாடிக்குள்
காதல் எனும் செடி வைத்தேன்
கற்பனை எனும் நீர் ஊற்றினேன்
உயிரை உருக்கி உரமாக்கினேன்

நான் வளர்த்த காதல் செடி
வண்ணம் வண்ணமாய் பூக்கள் பூக்க
அப் பூக்களுக்கு சொந்தக்காரி
நீ மட்டும்  தானென்று
வார்த்தைகளில் சொல்லவந்தேன்
வாயடைத்துப்போய் நின்றேன்
உதடுவரை வந்த வார்த்தை
உன்னை பார்த்த கணமே
உயிரிலே உறைந்ததென்ன...

உன்னில் நான் கொண்ட காதல்
உலகிற்கு புரியாது
உனக்கும் தெரியாது
நான் கொண்ட காதலும்
ஊமை கண்ட கனவும்
உண்மையில் ஒன்றுதான்
உருவமில்லா என் காதலுக்கு
உயிர் கொடுத்தவள் நீதான்

சூரியனின் ஓளி பட்டு
தெறிக்கும் நிலவா நீ....
கதிரவனுக்கும் ஓளி கொடுக்கும்
உவமானம் இல்லா  உருவம் நீ...
பனித் துளிகள் உனை விட
பரிசுத்தமானவையா... ....
பாலொளி தெறிக்கும் உன்
பளிங்கு முகத்துக்கு
பௌர்ணமி நிலவுகள் ஈடாகுமா... ...








வெள்ளி, 23 மார்ச், 2012

நீ.......

உன் கண்கள் இரண்டும்
மின்னல் ஒளி வீசும் மீனினமா...
கன்னங்கள் இரண்டும்
ஒரு வானில் தோன்றும்
இரு பௌர்ணமி நிலவுகளா....
காதுகள் இரண்டும்
இடைவெளி விட்டு பூத்த
ஓரிதழ் பூக்களா......
புருவங்கள் இரண்டும்
நாடு வானில் தோன்றும்
கரிய வால் நட்ச்சதிரங்களா....
பொட்டிட்ட நெற்றி
நான் முத்தமிட வந்த
மூன்றாம் பிறையா.........

செவ்வாய், 20 மார்ச், 2012

எம் இனிய பாரதத்துக்கு நன்றிகள்...

பாசத்துக்குரிய பாரதமே!!!
பாக்கு நீரினை எமக்கிடையில்
பாரியதொரு தூரமா...???
எட்டுக் கோடி தமிழ் மக்களின்
எல்லையற்ற பாசத்தால்
எம் தாய் மண்ணில் படிந்த
கடடளவில்லா குருதிக் கறையின் ஒருபகுதி
கழுவப்பட்டு கரைகிறது

எம் கண்ணில் நீர்வடிந்தால்
உம் நெஞ்சில் உதிரம் கொட்டும்
உண்மையை நாமறிவோம்
எம் மண்ணில் பாய்ந்த குருதி
கடலிலே கரைந்து
உம் கரையை தட்டியதோ....!!!
அன்றி ஓரினம் என்று ஒன்று திரன்டீரோ..!!

வரலாறு காணாத ஏகோபித்த
ஆதரவை நீங்கள் தருகையில்
எம் நெஞ்சம் நெகிழ்கிறது...
தந்தையர் நாடாம் இந்தியா
தந்தை துணை இன்றி தனித்து
தாயவள் என் செய்வாள்....??
உங்கள் அன்பான ஆதரவில்
சிலுவையில் அறையப்பட்ட நாம்
சிறகு கொண்டு பறப்போம்
எல்லையற்ற தமிழ் வானில்...

அன்புச்செல்வன் 

உன் அழகு

அந்தி வானம் சிவக்கையில் கூட
உன் மஞ்சள் முக அழகு அங்கு
தோன்றவில்லையே.......
பூத்துக் குலுங்கும் பூக்களில் கூட
உன் கதை பேசும் விழிகளின்
காந்த சக்தியில்லையே....
கார்த்திகை மாத கார் மேகங்களில் கூட
உன் நெடுங்  குழலின் கருமை அங்கு
யொலிக்கவில்லையே......

பூக்களுக்குள் சண்டை

நீ பிறக்கமுன்பும் பூக்களுக்குள் சண்டைதான்
தங்களில் யார் அழகென்று...
நீ பிறந்தபின்னும் பூக்களுக்குள் சண்டைதான்
உன் கூந்தலில் யார் அமர்வதென்று...

திங்கள், 19 மார்ச், 2012

பல்கலைக்கழகத்தில் நாங்கள்......

கனவுகள் பல சுமந்து கம்பஸ் வந்தோம்
கடந்தது நான்கு ஆண்டுகள்தான்
ஆனால் எதிர்பார்த்த ஏணியில்
நாலு படிகூட ஏறவில்லை

குப்பி போடச் சொல்லி
குட்டிக்கரணம் போட்டு
தட்டித் தட்டி பாஸ் பண்ணிய
பாடங்களும் இங்குண்டு

கொத்துக் கொத்தாய் கோஸ் வேக்குகள்
கொப்பி பண்ணி பேஸ் பண்ணி
கொம்பிளீடும்  பண்ணினோம் -
சத்தம் போட்டு சொல்லவேண்டாம்
நாங்கள் நித்தம் படும் பாட்டையெல்லாம்

எம் தேசம்

இரத்தத்தில் தோய்ந்த
என் சொந்தங்களுக்காக
காகிதம் எடுத்து
கவிதை தொடுத்தேன்

இரத்த சூட்டில்
கொதித்து எழுந்தேன்
பேனா முனையில்
தீப்பொறி தீட்டினேன்

கொத்துக் கொத்தாய்
உடல்கள் அங்கே
இரத்த வெள்ளத்தில்
அடித்துச் செல்கிறது

கொன்று குவித்த எம்
இனத்தின் பிண்டங்களை
தின்று தீர்த்தது
இனவெறி அரசு

எஞ்சியிருக்கும் என்
இனிய சொந்தங்களை
வாஞ்சையோடு வாழவைக்க
விஞ்சி நிற்கிறேன்

அஞ்சி வாழ்ந்த
வாழ்வை விட்டு
நெஞ்சு நிமிர்ந்து
சொல்லுங்கள் தமிழனென்று

என்னை பெற்ற தாய் மண்ணே
உன் மார்பில் தவழ்ந்த குழந்தை நானம்மா
நான் உடல்கொண்ட நாளிலிருந்து
உயிர் வைத்தது உன்னிலம்மா

உன் நேசக்கற்று என்மேல்
வீசையில் நான் சலசலத்து
ஓடுகிறேன் தேனான
 என் தமிழருவியில் 


அன்புச்செல்வன்       

உங்கள் அன்புச்செல்வன்

புதிதாக தோன்றியிருக்கும் கவிஞன் நான்
தமிழ் அன்னையில் கருக்கொண்டு
உங்கள் முன் உருக்கொண்டு
தவழ்ந்து பழக நினைக்கிறேன்

என் கரம் பிடித்து நடை பழக்கி
உங்கள் தோழ் கொடுத்து உரமூட்டி
என் பயணம் தொடர உங்கள்
அன்பான வாழ்த்துக்கள் எனக்கு என்றுமே

அம்மா

வரிகளில் மிகச்சிறிய  கவிதை அம்மா ........
அர்த்தங்களில் மிகப்பெரிய கவிதை அம்மா ..........