செவ்வாய், 20 மார்ச், 2012

எம் இனிய பாரதத்துக்கு நன்றிகள்...

பாசத்துக்குரிய பாரதமே!!!
பாக்கு நீரினை எமக்கிடையில்
பாரியதொரு தூரமா...???
எட்டுக் கோடி தமிழ் மக்களின்
எல்லையற்ற பாசத்தால்
எம் தாய் மண்ணில் படிந்த
கடடளவில்லா குருதிக் கறையின் ஒருபகுதி
கழுவப்பட்டு கரைகிறது

எம் கண்ணில் நீர்வடிந்தால்
உம் நெஞ்சில் உதிரம் கொட்டும்
உண்மையை நாமறிவோம்
எம் மண்ணில் பாய்ந்த குருதி
கடலிலே கரைந்து
உம் கரையை தட்டியதோ....!!!
அன்றி ஓரினம் என்று ஒன்று திரன்டீரோ..!!

வரலாறு காணாத ஏகோபித்த
ஆதரவை நீங்கள் தருகையில்
எம் நெஞ்சம் நெகிழ்கிறது...
தந்தையர் நாடாம் இந்தியா
தந்தை துணை இன்றி தனித்து
தாயவள் என் செய்வாள்....??
உங்கள் அன்பான ஆதரவில்
சிலுவையில் அறையப்பட்ட நாம்
சிறகு கொண்டு பறப்போம்
எல்லையற்ற தமிழ் வானில்...

அன்புச்செல்வன் 

4 கருத்துகள்:

  1. நாம் ஒன்றும் ஜெயேசு இல்ல ........ சிலுவையில் அறையப்பட...........புரிகிறதா நண்பணே ???????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் இனப்பற்று கவிதைகளில் தெரிக்கின்றதே..........

      நீக்கு
    2. எம் கண்ணில் நீர்வடிந்தால்
      உம் நெஞ்சில் உதிரம் கொட்டும்
      உண்மையை நாமறிவோம் .........
      .உதிரம் இங்கு கொட்டிய போது தீக்குளித்த மறவர்களை மட்டும் சொல்லுங்கள் தமிழன் என்று ........இங்கு கொத்து குண்டுகளை கொடுத்து நம் ஈழத்தின் உதிரம் குடிக்க கொடுத்தவனும் அதை வீசிசென்ர போது செம்மொழிக்கு விளாக்கொண்டாடியவனும் உம்தாய்வழி நாடோ

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு