என் சிந்தனை ஊற்றுக்களை வடிக்கும் ஏடு இது. கவிதைகள், கட்டுரைகள் மற்றும் மொக்கைகள் ஊடாக உங்கள் முன் அன்புச்செல்வன்.
வெள்ளி, 13 ஜூலை, 2012
பெண்ணே...
காலை பொழுதும் புலர்கிறது_ ஆனால்
எங்களுக்கோர் விடியலில்லை..
தரையிலே படுத்திருக்கும் ஏழைப்
பென்னினதிட்கு மோட்சமில்லை
கரை வந்து சேர்வதற்கு இந்த
பெண்ணினதிட்கு கப்பலில்லை
தத்தளிக்கும் இவர்கள் மனம்
சமுதயதிட்கு புரிவதில்லை....
சின்ந்தனயில்ல மனிதர்களின்
சீதனம் எனும் கொடுமையினால்
வேதனையில் வீழ்ந்துவிட்டாள்
சொந்தமில்லா சிலையிவள்
தம் இழி வாழ்வுக்காய்
சீதனம் கேட்கும் காதகர் நடுவில்
வழி தவறி வந்துவிட்டாள்
எழில் மிகு நங்கையிவள்...
விதியின் வலிதான் இது என்று
இவள் நொந்து போவதா- இல்லை
வாழ வழியில்லா ஆடவரின்
வாழ்க்கை பிச்சைஎன சாடுவதா..
ஏழ்மை எனும் ஆழ்கடலில்
கண்ணீரில் மிதக்கிறாள்
கலங்கரை விளக்கேதுவுமில்லா
கரை தெரியா ஓடமிவள்
மன்கைஎன்று பிறந்தது இந்த
மயில் செய்த தவறா????
மதி கெட்ட மானுடமே - உனக்கு
மனசாட்சி இல்லையா???
மலரினை மாலையிலே தொடுபதட்கு
இளம் கொடியிடம் கூலி கேட்கும்
தரம் கெட்ட மனிதர்களும்
தரணியில் பிறந்தனரா???
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக