வெள்ளி, 23 மார்ச், 2012

நீ.......

உன் கண்கள் இரண்டும்
மின்னல் ஒளி வீசும் மீனினமா...
கன்னங்கள் இரண்டும்
ஒரு வானில் தோன்றும்
இரு பௌர்ணமி நிலவுகளா....
காதுகள் இரண்டும்
இடைவெளி விட்டு பூத்த
ஓரிதழ் பூக்களா......
புருவங்கள் இரண்டும்
நாடு வானில் தோன்றும்
கரிய வால் நட்ச்சதிரங்களா....
பொட்டிட்ட நெற்றி
நான் முத்தமிட வந்த
மூன்றாம் பிறையா.........

12 கருத்துகள்:

  1. யார் அந்த நீ என்று அறிய முடியுமா?

    பதிலளிநீக்கு
  2. உங்களுடைய கவிதைகள் நன்றாக இருக்கின்றன....
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான வர்ணனைகளெல்லாம் போட்டு போட்டு பெண்களை உசுப்பெர்ரவேண்டாம் பாவலரே

      நீக்கு
  4. நல்ல வேளை முகத்தோடு மட்டும் நின்று விட்டீர்கள் நண்பணே...........
    முக்கியமாக உதட்டை விட்டு விட்டீர்களே நண்பணே ..........
    இருந்தாலும் கவிதை அருமை............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதடுகள் இரண்டும்
      உறை பனி நிறைந்த
      உலகின் இரு துருவங்கள...???

      நீக்கு
    2. அப்போ உதடுகள் வெள்ளை நிறமா? .......
      ஆனாலும் நன்று நண்பணே........
      உங்கள் நண்பி.....

      நீக்கு
    3. உதடுகள் வெள்ளை நிறமல்ல

      வானவில்லில் சிவப்பெடுத்து
      வர்ணம் பூசப்பட்ட
      வளைந்த இரு வில்லுகள்
      அவள் உதடு எனும்
      அணு உலைகள்

      நீக்கு
  5. அருமை, கொஞ்சம் கிழ வாங்கோ.....
    என்னும் எதிர்பார்கிறோம்

    பதிலளிநீக்கு